சொல் பொருள்
(பெ) 1. கணப்புச்சட்டி, 2. மண்சட்டி, 3. ஓமகுண்டம், 4. ஒரு மரம், 5. வளைவு, 6. அகலம், 7. பெருமை
சொல் பொருள் விளக்கம்
1. கணப்புச்சட்டி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
earthen pot holding fire with cinder, earthen pot, sacrificial pit, a tree, curve, bend, breadth, greatness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பகு வாய் தடவில் செம் நெருப்பு ஆர – நெடு 66 பிளந்த வாயையுடைய கணப்புச்சட்டியின் சிவந்த நெருப்பின் (வெம்மையை)நுகர; கள் உடை தடவில் புள் ஒலித்து ஓவா – நற் 227/7 கள்ளையுடைய குடத்தில் வண்டினங்கள் மொய்த்து ஒலியெழுப்புதல் நிற்காத நீயே வட பால் முனிவன் தடவினுள் தோன்றி – புறம் 201/8 நீதான், வடபக்கத்து முனிவனுடைய ஓமகுண்டத்தில் தோன்றி அன்றில் இறவின் அன்ன கொடு வாய் பெடையொடு தடவின் ஓங்கு சினை கட்சியில் – குறு 160/1-3 ஆண் அன்றில் இறாமீனைப் போன்ற வளைந்த மூக்கினையுடைய பெண் அன்றிலோடு தடா மரத்தின் உயர்ந்த கிளையிலுள்ள கூட்டிலிருந்து தடவு நிலை பலவின் முழு முதல் கொண்ட சிறு சுளை பெரும் பழம் கடுப்ப – பெரும் 77,78 வளைந்த நிலைமையினையுடைய பலாமரத்தின் அடிப்பகுதியில் குலைகொண்ட சிறியதாகிய சுளையினையுடைய பெரிய பழத்தை ஒப்ப, இறவு புறத்து அன்ன பிணர் படு தடவு முதல் சுறவு கோட்டு அன்ன முள் இலை தாழை – நற் 19/1,2 இறாலின் முதுகைப் போன்ற சொரசொரப்பு வாய்ந்த அகன்ற அடியினைக்கொண்ட சுறாமீனின் கூரிய கொம்பைப் போன்ற முட்களைக் கொண்ட இலையையுடைய தாழையின் உரவு திரை பொருத பிணர் படு தடவு முதல் அரவு வாள் வாய முள் இலை தாழை – நற் 235/1,2 வலிமையான அலைகள் மோதுகின்ற சொரசொரப்பான பெரிய அடியையும், அரத்தின் வாய்போன்றதாயுள்ள முள்ளாலான இலைகளையும் கொண்ட தாழை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்