சொல் பொருள்
1. (வி) 1. தடு, 2. அகன்றிரு, 2. (பெ) இடையூறு
சொல் பொருள் விளக்கம்
1. தடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hinder, stop, be broad, hindrance, obstacle
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நசையுநர் தடையா நன் பெரு வாயில் – பொரு 66 விரும்பி வந்தாரைத் தடுக்காத நல்ல பெரிய (கோபுர)வாயிலினுள் தடையின திரண்ட தோள் தகை வாட சிதைத்ததை – கலி 45/15 அகன்று திரண்டு இருக்கும் தோள்களின் அழகு வாட நீ சிதைத்துவிட்டாய் வேண்டு வழி நடந்து தாங்கு தடை பொருது – பரி 7/19 விருப்பமான வழிகளிலெல்லாம் நடந்து, குறுக்கிடும் இடையூறுகளை மோதித்தாக்கி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்