சொல் பொருள்
(வி.எ) தடவி என்பதன் திரிபு, 1. வருடி, 2. மறைத்து, 3. திரண்டு
சொல் பொருள் விளக்கம்
தடவி என்பதன் திரிபு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
stroking, hiding, be rotund
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ கரும் கோட்டு சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப – நெடு 69,70 பெரிய எழுகின்ற முலையின் வெப்பத்தால் வருடி, கரிய தண்டினையுடைய சிறுயாழைப் பண் நிற்கும் முறையிலே நிறுத்த தழையும் தாரும் தந்தனன் இவன் என இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ தைஇ திங்கள் தண் கயம் படியும் – நற் 80/5-7 உடுக்கும் தழையும், சூடும் மாலையும் தந்தான் இவன் என்று அணிகலன் அணிந்த தோழியரோடு தகுந்த நாணத்தை மறைத்துக்கொண்டு தைத்திங்களில் குளிர்ந்த குளத்துநீரில் நீராடும் முறம் செவி யானை தட கையின் தடைஇ இறைஞ்சிய குரல பைம் தாள் செந்தினை – நற் 376/1,2 முறம் போன்ற செவியினைக் கொண்ட யானையின் நீண்ட கையினைப் போல, பருத்து வளர்ந்து தலைசாய்த்த கதிர்களைக் கொண்ட பசிய தாள்களைக் கொண்ட செந்தினையை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்