சொல் பொருள்
(வி) 1. தங்கு, 2. தளையிடு, கட்டு
சொல் பொருள் விளக்கம்
1. தங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
remain, stay, bind, enchain
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செற்ற தெவ்வர் கலங்க தலைச்சென்று அஞ்சுவர தட்கும் அணங்கு உடை துப்பின் – மது 139,140 (தம்மால்)செறப்பட்ட பகைவர் மனம் கலங்கும்படி அவரிடம் சென்று (அவர்க்கு)அச்சம் தோன்றத் தங்கும், வருத்தத்தை உடைய வலிமையினையும், ஓடி உய்தலும் கூடுமன் ஒக்கல் வாழ்க்கை தட்கும் மா காலே – புறம் 193/3,4 நன்னெறிக்கண்ணே ஒழுகிப் பிழைக்கவும் கூடும் சுற்றத்தோடு கூடி வாழும் இல்வாழ்க்கை காலைத் தளையிட்டு நிற்கும்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்