சொல் பொருள்
தட்டிக் கழித்தல் – சொல்லியதைக் கேளாமல் ஒதுங்குதல் (மழுப்புதல்)
சொல் பொருள் விளக்கம்
ஒன்றைச் சொன்னால் அதற்குத் தக்கவாறான ஒரு மறுப்பை அல்லது காரணத்தைச் சொல்லிச் சொன்னதைச் செய்யாமல் ஒதுங்குபவரைக் கண்டு “என்ன, தட்டிக் கழிக்கிறாயா?” என்பது வழக்கு, “தட்டிக் கழிப்பதில் பெரிய ஆள். எதைச் சொல்லுங்களேன் அதற்கு ஒன்று அவன் வைத்திருப்பான்” என்பதும் கேட்பதே. இங்கே தட்டுதல், கழித்தல் என்னும் சொற்களுக்கு நேர்பொருள் இல்லை. இரண்டும் சேரும்பொழுது மழுப்புதல் என்னும் பொருள் தருதல் கண்டு கொள்க.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்