சொல் பொருள்
தட்டிக் கொடுத்தல் – பாராட்டல், அடித்தல்
சொல் பொருள் விளக்கம்
ஒரு செயலைச் சிறப்பாகச் செய்நுது முடித்தாலும், ஒரு போட்டியில் வென்றாலும், பாராட்டத்தக்க பண்புடன் நடந்து கொண்டாலும் அவ்வேளையில் தட்டிக் கொடுத்தல், தழுவிக் கொள்ளல் ஆகியவை நிகழ்த்துவர். ஆதலால் தட்டிக் கொடுத்தல் என்பதற்குப் பாராட்டுதல் என்னும் பொருள் உண்டாயிற்றாம். இனிச்சில வேளைகளில் இதற்கு எதிரிடைப் பொருளும் உண்டாவதுண்டு. “உன்னைத் தட்டிக் கொடுத்தால் தான் ஒழுங்காக வேலைபார்ப்பாய்” என்பதில் தட்டிக் கொடுத்தல் என்பது அடித்தல் பொருளில் வருகின்றதாம். ஒரு தட்டுத் தட்டு சரியாகும் என்பார். தட்டு = அடி
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்