சொல் பொருள்
தண்டா – வரி வாங்க அல்லது வரிதண்ட வந்தவனா?
தசுக்கா – கொழுத்துப் போய் வந்தவனா?
சொல் பொருள் விளக்கம்
“நான் அவனிடம் நடந்தது என்ன என்று கேட்டேன். உடனே அவன் ‘தண்டா தசுக்கா’ என்று குதித்து விட்டான்” என்பது வழக்கு. அரசு வரி தண்டவயதவன் அடாவடி ஆணை செலுத்துவதையும் தடி தூக்கியவனெல்லாம் தண்டக்காரனா என்பதையும் கருதினால் தண்டா என்பதன் பொருள் விளங்கும். தண்டு என்பது படை; தசுக்கு என்பது கொழுத்த ஊன்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்