Skip to content

சொல் பொருள் விளக்கம்

1. (வி) 1. வற்புறுத்து, 2. விருப்பம்கொள், 3. இறையாகப்பெறு, வசூல்செய்

2. (பெ) 1. தடி, 2. குறுந்தடி, 3. பல்லக்கு, காவடி ஆகியவற்றின் கழி,  4. இலை,பூ ஆகியவற்றின் காம்பு

கீரை, வாழை முதலியவற்றின் அடி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

insist on, be desirous, get as share to the king, collect as tax, staff. stick, club, pole of a palanquin, etc., stalk, stem

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்
பராஅரை வேவை பருகு என தண்டி – பொரு 103,104

அறுகம் புல் கட்டுக்களை கவ்வித்தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட(இறைச்சியின்)
பெரிய (மேல்)தொடை நெகிழ வெந்ததனைத் ‘உண்பாயாக’ என்று வற்புறுத்தி,

தண்டி தண்டின் தாய் செல்வாரும் – பரி 10/100

விருப்பத்துடன் வாழைத்தண்டுகளைத் தழுவிக்கொண்டு தாவித்தாவிச் செல்வார் சிலர்;

தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ – மலை 425

தசைகளையும் கிழங்குகளையும் இறையாகப்பெற்றவராய் (அவற்றை உமக்குக்)கொடுத்து

விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை
——————-
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் – பெரும் 170-175

விழுமிய தடியை ஊன்றின கோடரித் தழும்பிருந்த வலிய கையினையும்,
————————-
ஒன்றாய்ப் பொருந்தின உடையினையும் உடைய, கூழை உண்ணுகிற இடைமகன்

தண்டு கால் ஆக தளர்தல் ஓம்பி – மலை 371

(முரசை அடிக்கும்)குறுந்தடியை (மூன்றாவது)காலாக (ஊன்றிக்)கொண்டு, தடுமாறுதலினின்றும் (உம்மைக்)காத்து,

சகடமும் தண்டு ஆர் சிவிகையும் பண்ணி – பரி 10/17

வண்டிகள், தண்டு மரங்களோடு கூடிய பல்லக்குகள் ஆகியவற்றைத் தயார்செய்துகொண்டு

குவளை பசும் தண்டு கொண்டு – பரி 11/102

குவளையின் இளம் தண்டினைக் கையில் கொண்டு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *