சொல் பொருள்
(வி) 1. அடர்த்தியாய் இரு, நெருக்கமாய் இரு, 2. சிதைவடை, உடைபடு, 3. மிகு, நிறை
சொல் பொருள் விளக்கம்
1. அடர்த்தியாய் இரு, நெருக்கமாய் இரு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be dense, be crowded, be broken, shattered, be plenty, abundant
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெண் மணல் விரிந்த வீ ததை கானல் – குறு 386/1 வெள்ளை மணல் பரவிய மலர்கள் செறிந்துகிடக்கும் கடற்கரைச்சோலையில் உள்ள, மட நடை நாரை பதைப்ப ததைந்த நெய்தல் – ஐங் 155/2,3 இளமையான நடையைக் கொண்ட நாரை சிறகடித்து அங்குமிங்கும் பறந்துதிரிவதால் சிதைந்துபோன நெய்தல் மலர் ததைந்து செல் அருவியின் அலர் எழ – அகம் 303/7 மிக்குச் செல்லும் அருவியின் ஒலி போன்று அலராகி வெளிப்பட
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்