சொல் பொருள்
(பெ) பச்சிலை, நறைக்கொடி
சொல் பொருள் விளக்கம்
பச்சிலை, நறைக்கொடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a fragrant creeper
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடும் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த பசும் கேழ் இலைய நறும் கொடி தமாலம் தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும் – நற் 292/1-3 நெடிதுயர்ந்த குளிர்ச்சியான சந்தனமரத்தின் ஆடுகின்ற கிளைகளில் சுற்றிக்கொண்டிருக்கும் பசுமை நிறங்கொண்ட இலைகளையுடைய மணமிக்க தமாலக்கொடியை இனிய தேனை எடுக்கும் குறவர்கள் வளைத்து முறிக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது