சொல் பொருள்
(வி) 1. முன்னும் பின்னும் அசை, 2. மனமழி, வாடு, 3. ஒளிவிடு, ஒளிர்
சொல் பொருள் விளக்கம்
1. முன்னும் பின்னும் அசை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
move to and fro, sway, loose heart, be dispirited, shine, glitter
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களிற்று தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி – சிறு 123 யானை(யைச் செலுத்துதலால் உண்டான) தழும்பு கிடந்த, வீரக்கழல் அலையாடும், திருத்தமான அடியினையும், தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து – பதி 79/15 தும்பைப் போரின் தன்மை பொருந்திய போரைச் செய்ததால் உடல் சோர்ந்து ஓய்ந்திருக்க, தயங்கு இரும் பித்தை பொலிய சூடி – புறம் 371/4 ஒளிர்கின்ற தலைமயிர் அழகுறச் சூடிக்கொண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்