சொல் பொருள்
தரங்கு என்பது வில்லுக்குழி வட்டார வழக்கில் களை சுரண்டியைக் குறித்தல் அரிய சொல்லியல் நெறி
தரங்கு என்பது குதிங்கால் என்னும் பொருளில் கருங்கல் வட்டார வழக்கில் இடம் பெற்றுள்ளது
சொல் பொருள் விளக்கம்
அரங்குதல் = தேய்த்தல், தடவுதல், வருடல், அரங்கு > தரங்கு. தகர ஒற்று மிகல். புல் செதுக்கும் அல்லது களை செதுக்கும் கருவியைக் களைக் கொட்டு, களை சுரண்டி, களை கொத்தி, சுரண்டி எனல் பொது வழக்கு. தரங்கு என்பது வில்லுக்குழி வட்டார வழக்கில் களை சுரண்டியைக் குறித்தல் அரிய சொல்லியல் நெறி, எளிமையாய் மக்கள் வழக்கில் இடம்பெற்ற சான்றாம். தரங்கு என்பது குதிங்கால் என்னும் பொருளில் கருங்கல் வட்டார வழக்கில் இடம் பெற்றுள்ளது. தரைதல் = ஊன்றுதல்; என்னும் வழியது அது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்