சொல் பொருள்
(பெ) 1. நடுகழி, கட்டுத்தறி, 2. முளைக்கோல்,
சொல் பொருள் விளக்கம்
1. நடுகழி, கட்டுத்தறி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
stake, short wooden pole planted, peg
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடும் தாம்பு தொடுத்த குறும் தறி முன்றில் கொடு முக துருவையொடு வெள்ளை சேக்கும் – பெரும் 152,153 நெடிய தாம்புகள் கட்டப்பட்ட குறிய முளைகளையும் உடைய முற்றத்தில், வளைந்த முகத்தையுடைய செம்மறியாட்டுடன் வெள்ளாடும் கிடக்கும் செம் கேழ் வட்டம் சுருக்கி கொடும் தறி சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க – நெடு 58,59 சிவந்த நிறத்தையுடைய விசிறி (மூடிச்)சுருக்கிடப்பட்டு, வளைந்த முளைக்கோலில், சிலந்தியின் வெள்ளிய நூலால் சூழப்பட்டனவாய் தொங்கிக்கொண்டிருக்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்