சொல் பொருள்
தறிகெட்டவன் – நிலைத்து ஓரிடத்து அமையாதவன்
சொல் பொருள் விளக்கம்
தறி என்பது தூண். தறியில் மாடு கன்று யானை முதலியன கட்டப்பெறும். மாடு கட்டும் தறி கட்டுத்தறி. கட்டுத்துறை எனவும் வழங்கும். தறி போடுவதற்கும் அடிப்படை தறியே. அப்பெயரே அத்தொழிற்பெயராக அமைந்தது. தறி நிலைபெறுதல் பெற்றமையால், நிலை பெறாமல் திரிபவனைத் தறி கெட்டவன் என்பது வழக்காயிற்று. பாவு, மிதி, அசை ஆகியவை தறியில் அசையும். தறி அசையாது நிற்கும்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்