சொல் பொருள்
(பெ) 1. கொல்லுதல், 2. அஞ்சாமை
சொல் பொருள் விளக்கம்
1. கொல்லுதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
killing, fearlessness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தறுகண் பூட்கை தயங்கு மணி மருங்கின் சிறு கண் யானையொடு பெரும் தேர் எய்தி – சிறு 141,142 கடுகக் கொல்லுதலை மேற்கோளாகக் கொண்டதும், அலையாடும் மணியை உடைய பக்கத்தினையும் சிறிய கண்ணையும் உடைய யானையுடன் பெரிய தேரையும் பெற்று மென் தினை மேய்ந்த தறுகண் பன்றி – ஐங் 261/1 மென்மையான தினைப் பயிரை மேய்ந்த எதற்கும் அஞ்சாத காட்டுப்பன்றி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்