சொல் பொருள்
தலைகவிழ்தல் – இழிவுறுதல்
சொல் பொருள் விளக்கம்
ஒருவர் செய்த பிழையைச் சுட்டிக்காட்டும்போது, சுட்டப் பட்டவர் மானியாக இருப்பின் அவர் தலைகவிழ்தல் இயற்கை. தலைகவிழ்தல் என்பது இதனால் இழிவுப் பொருள் தருவதாயிற்று. புகழமைந்த மனையாள் இல்லாதவனுக்கு ஏறுபோல் பெருமிதமாக நடக்கும் நடை இல்லை என்றார் திருவள்ளுவர். ஏறுபோல் நடையாவது தலையெடுத்து நிமிர்ந்து செல்லும் நடையாம். களவு கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளியாக ஊர் மன்றத்தில் நிறுத்தப்பட்டவன் தலைகவிழ்ந்து காலால் நிலங்கிளைத்தலைக் குறித்துக் காட்டும் கலித் தொகை. “தலைகவிழ வைத்துவிட்டாயே!” என்று தம் தொடர்பாளர் செய்த குறைக்காகப் புண்படுவார்கூறுவரெனின் தலைகவிழல் இழிவு நன்கு புலனாம். ஒரு செயலைச் செய்யும் வகையால் செய்யாது கெடுத்தால், தலைகீழ் ஆக்கிவிட்டான் என்பதும், மாறாக நடத்தல் தலைகீழாக நடத்தல் என்பதும் வழக்கு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்