சொல் பொருள்
(வி) 1. கைப்பற்று, 2. கெடு,அழி, 3. மேற்கொள், 4. தொடங்கு,
சொல் பொருள் விளக்கம்
1. கைப்பற்று,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
capture, seize, destroy, observe, undertake, commence
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில் கரும் கண் எயிற்றி காதல் மகனொடு கான இரும் பிடி கன்று தலைக்கொள்ளும் புறம் 181/1-3 மன்றத்தின்கண் நிற்கும் விளாமரத்தின் மனையில் வீழ்ந்த விளாம்பழத்தைக் கரிய கண்ணை உடைய மறத்தியின் காதல் மகனுடனே காட்டில்வாழும் கரிய பிடியின் கன்று வந்து எடுக்கும். ஒண் படை கடும் தார் முன்பு தலைக்கொள்-மார் நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய – புறம் 15/14,15 ஒள்ளிய படைக்கலங்களையுடைய உன் விரைந்த தூசிப்படையின் வலிமையினைக் கெடுத்தல்வேண்டி தம் ஆசை கொடுவர வந்தோர் அந்த ஆசை பின்னொழிய அதனால் அகறல் அறியா அணி இழை நல்லார் இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர் இ – பரி 9/23,24 அதனால், தம் துணைவர் தம்மைவிட்டு அகன்றிருத்தலையே அறியாத அழகிய அணிகலன் அணிந்த மகளிர் தம் கணவருடன் மனவேறுபாடு மேற்கொண்டு அவரை வருத்தும் தவறினைச் செய்யமாட்டார்; மலை பரந்து தலைக்கொண்டு முழங்கிய முழங்கு அழல் மயங்கு அதர் மறுகலின் மலை தலைக்கொண்டு என விசும்பு உற நிவந்து அழலும் விலங்கு அரு வெம் சுரம் – கலி 150/4-6 மலைகளில் பரவி அவ்விடங்களையெல்லாம் மேற்கொண்டு, முழங்கிய முழக்கத்தையுடைய தீக்கொழுந்துகள் குழப்பத்தைத்தரும் குறுக்குநெடுக்கான வழிகளே பாதைகளாய்க் கொண்ட மலைகளைத் தொடக்கமாகக் கொண்டு வானத்தில் தோயும்படியாக உயர்ந்து வெம்மையைச் செய்யும் கடப்பதற்கு அரிய கொடுமையான காட்டுவழியை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்