சொல் பொருள்
தலைதடவல் – சுரண்டுதல், முழுவதும் பறித்தல்
சொல் பொருள் விளக்கம்
தலையில் ஈரும் பேனும் சேர்ந்துவிட்டாலும் அழுக்குப் பிடித்து விட்டாலும் தலையைச் சொறிய அல்லது சுரண்டநேரும். கையால் தலையைத் தடவுவதுடன் விரல்களால் சொறிந்து தினவைப்போக்கிக் கொள்ளல் காணக்கூடியதே. இத்தலை தடவலில் சுரண்டுவதும் உண்டாகலின் பிறர் செல்வத்தைச் சுரண்டுவதைத் தலைதடவலாகக் கூறும் வழக்கம் உண்டாயிற்று. இனித் தலையைத்தடவல் அன்பின் அடையாளம். அவ்வாறு தலையைத் தடவி அன்பை வெளிப்படுத்துவதுபோல் மயக்கித் தம் தேவையை நிறைவேற்றிக் கொள்ளலும் தலை தடவலாக வழங்குவதாம். தலை தடவல் என்பதில் மற்றொரு பொருளும் உண்டு. தலையை முழுக்கத் தடவி மழிப்பதுபோல உள்ளவற்றையெல்லாம் பறித்துக் கொள்வதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்