சொல் பொருள்
1. (வி.அ) 1. மேலும் மேலும், 2. இடந்தோறும்,
2. (பெ) ஒவ்வொருவரும்
சொல் பொருள் விளக்கம்
1. மேலும் மேலும்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
more and more, in all places, every one
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வருநர் வரையா செழும் பல் தாரம் கொளக்கொள குறையாது தலைத்தலை சிறப்ப – பதி 88/26,27 பெருங்கூட்டமான இரவலருக்கும் – வரையாது வழங்கும் செழுமையான, பலவாகிய செல்வம், அந்த இரவலர் வாங்கிக்கொண்டேயிருக்கவும் குறைந்துபோகாமல் மேலும் மேலும் மிகுந்திருக்க, தத்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும் தத்து அரி கண்ணார் தலைத்தலை வருமே – பரி 16/9,10 தத்தம் காதல் துணைவரோடு ஒன்றுகூடி நீராடுகின்ற செவ்வரியும், கருவரியும் படர்ந்த கண்களையுடைய மகளிர் நீர்த்துறைதோறும் வருவர்; மகிழ்நன் மருது உயர்ந்து ஓங்கிய விரி பூ பெரும் துறை பெண்டிரோடு ஆடும் என்ப தன் தண் தார் அகலம் தலைத்தலை கொளவே – ஐங் 33/1-4 நம் தலைவன் மருதமரங்கள் உயர்ந்து ஓங்கி வளர்ந்திருக்கும் மலர்ந்த பூக்களைக் கொண்ட பெரிய துறையில் தன் காதற்பெண்டிரோடு நீராடி இன்புறுவன் என்று சொல்கின்றனர், அவனது குளிர்ந்த மாலையணிந்த மார்பினை ஒவ்வொருவராகப் பற்றிக்கொண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்