சொல் பொருள்
(வி) 1. காணப்படு, தோன்று, 2. சேர், ஐக்கியமாகு, 3. தொடங்கு, ஒன்றைச்செய்ய முற்படு, 4. எதிர்ப்படு, 5. அடை, பெறு,
சொல் பொருள் விளக்கம்
1. காணப்படு, தோன்று,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
appear, unite, commence, set about, meet, encounter, obtain, attain
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுரம் தலைப்பட்ட நெல்லி அம் பசும் காய் – குறு 209/1 பாலை நிலைத்து வழியில் காணப்படும் நெல்லியின் அழகிய பசிய காய்கள் மாய பொதுவன் உரைத்த உரை எல்லாம் வாய் ஆவது ஆயின் தலைப்பட்டாம் – கலி 112/21,22 இந்த மாய்மால இடையன் சொன்ன சொல் எல்லாம் உண்மையாக வாய்த்தால் இவனோடு சேர்ந்து வாழலாம் கண்ணியது உணரா அளவை ஒண்_நுதல் வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன் – அகம் 5/6,7 (நாம்)எண்ணியதை முழுதும் உணர்வதற்கு முன்னரேயே, ஒள்நுதல் தலைவி, (நாம்) பொருள்தேட முற்படுதலை ஏற்றுக்கொள்ளா எண்ணத்துடன் அத்த கள்வர் ஆ தொழு அறுத்து என பிற்படு பூசலின் வழிவழி ஓடி மெய் தலைப்படுதல் செல்லேன் – அகம் 7/14-16 வழிப்பறிக் கள்வர்கள் பசுக்களைத் தொழுவை உடைத்துக் கொண்டுசென்றனராக, அவர்களின் பின்னே துரத்திச்செல்வோர் ஆரவாரிப்பது போல, அங்குமிங்கும் ஓடி, அவளின் மேனியை எதிர்ப்பட்டிலேன் தன் நலம் கரந்தாளை தலைப்படும் ஆறு எவன்-கொலோ – கலி 138/7 தன்னுடைய நலத்தை நான் காணாதவாறு மறைத்துக்கொண்டவளை அடைகின்ற வழிதான் எதுவோ?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்