Skip to content

சொல் பொருள்

(வி) 1. கூடு,, 2. ஒன்றுசேர்

சொல் பொருள் விளக்கம்

1. கூடு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

join, come together

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை – அகம் 86/1

உழுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த செவ்விய குழைதலையுடைய பொங்கலோடு

நல்லாய் பொய் எல்லாம் ஏற்றி தவறு தலைப்பெய்து
கையொடு கண்டாய் பிழைத்தேன் அருள் இனி – கலி 95/27,28

நல்லவளே! பெய்யையெல்லாம் என் தலையில் ஏற்றி, தவறுகளையெல்லாம் ஒன்றுசேர்த்து,
என்னைக் கையோடு பிடித்துவிட்டாய், தவறிழைத்தேன்! அருள்செய்வாயாக!”

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *