சொல் பொருள்
(வி) 1. பிரிந்துசெல், 2. கலந்திரு, 3. மிகு, பெருகு, 4. கைகல, நெருங்கிச் சண்டையிடு,
சொல் பொருள் விளக்கம்
1. பிரிந்துசெல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
go astray as a deer from the herd, be mixed up, increase, multiply, fight at close quarters
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எல் படு பொழுதின் இனம் தலைமயங்கி கட்சி காணா கடமான் நல் ஏறு – புறம் 157/9,10 ஞாயிறு மறைகின்ற காலத்தில் இனத்திலிருந்து பிரிந்து தான் சேரும் இருப்பிடத்தைக் காணாத காட்டின்கண் உள்ள மானின் நல்ல ஆண்மான் கங்கை வாரியும் காவிரி பயனும் ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகின் – பட் 190-193 கங்கையாற்றின் விளைச்சலும், காவிரியாற்றின் செல்வங்களும், ஈழத்தின் உணவுப்பொருளும், கடாரத்தின் ஈட்டமும், அரிதானவும், பெரிதானவும், (நிலத்தின் முதுகு)நெளியும்படி திரண்டு, செல்வங்கள் (ஒன்றோடொன்று)கலந்துகிடக்கும் அகன்ற இடங்களுடைய தெருக்களும் பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம் குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம் – நற் 274/4,5 பொன்னால் செய்யப்பட்ட மேகலைக்காசு போன்று ஒள்ளிய பழங்கள் உதிரும் குமிழமரங்கள் நிறைந்துவளர்ந்த, சிறிதானவும் பலவானதுமான வழிகளில் தமிழ் தலைமயங்கிய தலையாலம்கானத்து – புறம் 19/2 தமிழ்ப்படை கைகலந்த தலையாலங்கானத்துக்கண்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்