சொல் பொருள்
தலையாட்டிப் பிழைப்பு – ‘ஆமாம்’ ‘ஆமாம்’ என்று சொல்லிப் பிழைத்தல்
சொல் பொருள் விளக்கம்
தன்னலம் நாடும் ஒருவன் எவர் என்ன சொன்னாலும் “ஆமாம் ஆமாம்” என்று சொல்வதை அன்றி மறுப்பதே இல்லை. ஆமாம் என்பதை வாயால் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தலையாட்டலை மறவார். அதனால் அத்தகையவர் தலையாட்டி எனவே பட்டப்பெயர் பெறலும் உண்டு. கோயில் மாடுகளுக்குத் தலையாட்டும் பயிற்சி தந்து என்ன சொன்னாலும் தலையாட்ட வைப்பார் உளர். அம்மாடு போலத் தலையாட்டுவாரைத் தலையாட்டிப் பொம்மை, ‘ஆமாம்சாமி’ என்பதும் வழக்கே. தஞ்சாவூர்ப் பொம்மை, தலையாட்டிப் பொம்மைச் சான்று.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்