சொல் பொருள்
தலையில் அடித்தல் – உறுதி கூறல்
சொல் பொருள் விளக்கம்
‘தலையில் அடித்துச் சொல்கிறேன்’ என்றால் உறுதி மொழிகிறேன் என்பது பொருள். உறுதி மொழிவார் துணியைத் தாண்டல், பிள்ளையைத் தாண்டல், தெய்வத்தின் மேல் ஆணை கூறல், கையடித்தல், தலையில் அடித்துக் கூறல் நெஞ்சில் கை வைத்துக் கூறல் என்பனவெல்லாம் வழக்கில் உள்ளவை. வாக்கை மட்டும் உறுதியாக்காமல், மற்றோர் உறுதியையும் கொண்டது இது. “தலைதொட்டேன்” எனவரும் இலக்கிய ஆட்சி தலையில் அடித்து உறுதிகூறல்” பழமையை உரைக்கும். “தலையில் அடித்துச் சொல்லவா” என்றால் உறுதி சொல்லவா என்று வினாவுதலாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்