சொல் பொருள்
தலை முழுகல் – தீர்த்துவிடல், ஒழித்துவிடல்
சொல் பொருள் விளக்கம்
சிக்கு அழுக்கு ஆகியவற்றைப் போக்க தலை முழுகுதல் தமிழர் வழக்கம். ‘எண்ணெய் தேய்த்துச் சீயக்காய் தேய்த்து நீராடல் வாரத்திற்கு ஒரு முறை கட்டாயமெனவும் திட்டப்படுத்தியுள்ளனர். இத்தலை முழுகல், முழுகுதலைக் குறியாமல் தலை முழுகுதலால் உண்டாகும் (அழுக்குப்) போக்குதல் விலக்குதல் – பொருளைக் கொண்டு வழக்கத்தில் உள்ளதாம். “உன்னைத் தலைமுழுகிவிட்டேன்” என்று ஒரு கணவன் மனைவியைச் சொன்னால் உன்னைத் தீர்த்துவிட்டேன் என்பது பொருளாகும். இனி, ஒருவர் இறந்தால் நீரினில் மூழகி நினைப்பொழிதல் உண்மையால் ஒழித்துவிடல் பொருளும் அதற்கு உண்டாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்