சொல் பொருள்
1. (வி) 1. துளிர்விடு, 2. மனமகிழ், 3. செழி, வளம்பெறு, 2. (பெ) இளம் இலை
சொல் பொருள் விளக்கம்
1. துளிர்விடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sprout, shoot forth, rejoice, prosper, flourish, tender shoot, sprout
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆஅம் தளிர்க்கும் இடை சென்றார் மீள்தரின் யாஅம் தளிர்க்குவேம்-மன் – கலி 143/29,30 ஆச்சாமரம் தளிர்க்கும் காட்டிடையே சென்றவர் மீண்டு வந்தால் நானும் அவர்களைப் போல் மனம் மகிழ்வேன்; ஆஅம் தளிர்க்கும் இடை சென்றார் மீள்தரின் யாஅம் தளிர்க்குவேம்-மன் – கலி 143/29,30 ஆச்சாமரம் தளிர்க்கும் காட்டிடையே சென்றவர் மீண்டு வந்தால் நானும் அவர்களைப் போல் மனம் மகிழ்வேன்; வறந்த ஞாலம் தளிர்ப்ப வீசி – ஐங் 452/1 வறண்டுகிடந்த நிலம் வளம்பெறுமாறு பெருமழை பெய்து செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் – திரு 207 அசோகின் குளிர்ந்த தளிர் அசைகின்ற செவியை உடையவன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்