Skip to content

தளுக்குதல்

சொல் பொருள்

தளுக்குதல் – நடிப்பால் மயக்குதல்

சொல் பொருள் விளக்கம்

தளுக்கு என்பது உடலை வளைத்தலும் நெளித்தலுமாம். உடலை வளைத்தும் நெளித்தும் இயற்கைக்குப் பொருந்தா வகையில் குழைவர் சிலர். அவரைத் தளுக்குபவராகக் குறிப்பர். இந்தத் தளுக்குடன் அணிகலம் ஆடை பூச்சு புனைவு எல்லாம் காட்டிப் பசப்புபவரும் உண்டு. அதனை மினுக்குதல் என்பர். “இந்தத் தளுக்கும் மினுக்கும் எவரைக் கெடுக்கவோ?” எனப்பார்த்த அளவானே கூறுவது உண்டு. அதற்கு மயங்கி அழிபவர்களும் பலப்பலர். தளுக்குதலும் மினுக்குதலும் உடையவர் மயங்க வைத்துத் தம் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வஞ்சகர் என்க. இவைபாற் பொதுவின எனினும், பெண்டிரைப் பற்றியே பெருவழக்காக உள்ளது.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *