சொல் பொருள்
(பெ) 1. கட்டு, பிணிப்பு, 2. மலரும் நிலையிலுள்ள பூ, மொட்டு, 3. கயிறு
சொல் பொருள் விளக்கம்
1. கட்டு, பிணிப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fastening, a bud in a flowering stage, cord, rope
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தளை அவிழ் அலரி தண் நறும் கோதை – நற் 367/9 கட்டு அவிழும் மலராலாகிய குளிர்ந்த, மணங்கமழும் மாலையை நாணு தளை ஆக வைகி மாண் வினைக்கு உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே – அகம் 29/21-23 மான உணர்வு கட்டிப்போட்டதனால் தங்கி, மாண்புள்ள வினை காரணமாக (என்)உடம்பு அங்கு இருந்ததே ஒழிய பேதைமை உள்ள (என்) நெஞ்சம் உன் அருகிலேயேதான் இருந்தது. இளையர் ஆடும் தளை அவிழ் கானல் – ஐங் 198/2 இளம்பெண்கள் விளையாடும் மொட்டுகள் கட்டவிழ்ந்த கடற்கரைச் சோலை சேற்று நிலை முனைஇய செம் கண் காரான் ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து – அகம் 46/1,2 சேற்றில் நிற்பதை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை ஊரார் உறங்கும் இருளில் தனது வலுவுள்ள கயிறை அறுத்துக்கொண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்