சொல் பொருள்
தளைபோடுதல் – திருமணம் செய்வித்தல்
சொல் பொருள் விளக்கம்
கழுதைக்குத் தளைபோடுதல் வழக்கம். முன்னங்கால் இரண்டையும் சேர்த்துத் தளைத்து விட்டால் அது ஓடிப்போகாது. போனாலும் எளிதில் கண்டுபிடித்துக் கொள்ளலாம். தளையாவது கட்டு. ஒருவன் வீட்டில் கட்டுப்பட்டு இருப்பதற்கு வழி தாலி கட்டி திருமணம் செய்துவிடுவது என்ற கருத்தால் தளை போடுதல் என்பது திருமணத்திற்கு ஆகியது. கட்டிக்கொள்ளுதல், தாலி கட்டுதல், கட்டிய மனைவி என்பவற்றில் வரும் கட்டுதல் திருமணத்தைக் குறிப்பதாம். மனைவியை நினைத்து ஊர்வழி சுற்றாமல் வீடு தேடி வருவதற்கு உதவியாகத் திருமணம் இருப்பதைக் கருதித் தளைபோடுதல் என்பது வழக்காயிற்று.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்