சொல் பொருள்
ஒதுக்கிவைத்தல் என்னும் பொதுப் பொருளில் நீங்கி, பூப்புற்ற பிள்ளையைத் தனித்திருக்க வைத்தலை உசிலம்பட்டி வட்டார வழக்கில் கேட்க முடிகின்றது
தள்ளிவைத்தல் – ஒதுக்கிவைத்தல்
சொல் பொருள் விளக்கம்
ஒதுக்கிவைத்தல் என்னும் பொதுப் பொருளில் நீங்கி, பூப்புற்ற பிள்ளையைத் தனித்திருக்க வைத்தலை உசிலம்பட்டி வட்டார வழக்கில் கேட்க முடிகின்றது. ஒதுக்கம், ஒதுக்கி வைத்தல் போல்வது இது. குச்சிலுள் வைத்தல் என்பது முகவை வழக்கு.
தள்ளிவைத்தல் என்பது இருவகையாக வழக்கில் உள்ளது. ஊரொடு ஒத்துப்போகாதவரை அல்லது ஊரை எதிர்த்து நிற்பவரை ஊரவர் தள்ளிவைப்பது ஒரு வகை. அவரும் அவர் குடும்பத்தவரும் ஊரொடு தொடர்பு கொடுக்கல் வாங்கல் எதுவும் செய்யமுடியாமல் தடுத்து நிறுத்தப்படுவர் என்பது அது. கணவன் மனைவியரிடையே கருத்து வேறுபாடு உண்டானால் ஒருவரை ஒருவர் தள்ளிவைப்பதும் உண்டு. இது, இந்நாளில் சற்றே பெருகிவருவது புலப்படுகின்றது. மகளிர் ஆடவரைத் தள்ளிவைப்பதும் அரிதாகத் தோன்றுகின்றது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்