சொல் பொருள்
(பெ) தவம் செய்பவர், துறவி, முனிவர்,
தவசிப் பிள்ளை என்பார் துறவர் மடத்துச் சமையல்காரரைக் குறித்துப் பின்னர்ப் பொதுவகையில் சமையல் செய்வார்க்கு ஆயிற்று
சொல் பொருள் விளக்கம்
தவத்தன்மை வாய்ந்த துறவியரைத் துறவி என்பது பொது வழக்கு. இப் பெயருடையார் உளர். தவசிப் பிள்ளை என்பார் துறவர் மடத்துச் சமையல்காரரைக் குறித்துப் பின்னர்ப் பொதுவகையில் சமையல் செய்வார்க்கு ஆயிற்று. இது தென் மாவட்ட வழக்கு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ascetic, hermit
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீடிய சடையோடு ஆடா மேனி குன்று உறை தவசியர் போல – நற் 141/4,5 நீண்ட சடையும் நீராடாத மேனியுமுடைய குன்றுகளில் வாழும் தவசிமாரைப் போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்