சொல் பொருள்
(வி) 1. ஒழி, இல்லாமல்போ, 2. விலக்கு, ஒதுக்கு, 3. விலகு, 4. தணி, 5. தடு, தடைசெய்
சொல் பொருள் விளக்கம்
1. ஒழி, இல்லாமல்போ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cease, become extinct, shun, exclude, abstain, refrain, subside, abate, hinder, obstruct
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கதிர் பகா ஞாயிறே கல் சேர்தி ஆயின் அவரை நினைத்து நிறுத்து என் கை நீட்டி தருகுவை ஆயின் தவிரும் என் நெஞ்சத்து உயிர் திரியா மாட்டிய தீ – கலி 142/37-40 கதிர்களை யாருக்கும் பகிர்ந்தளிக்காத ஞாயிறே! நீ மலையில் மறைவாயானால், அவரை நினைத்து, அவருள்ள இடத்தில் அவரை நிறுத்திப்பிடித்து, என் கைவரை நீட்டி உன் கதிர்களைத் தருவாயானால், அணைந்துபோகும், என் நெஞ்சத்தில் என் உயிரையே திரியாகக் கொண்டு கொளுத்திய காமத்தீ; அன்பினர் வாழி தோழி நன் புகழ் உலப்பு இன்று பெறினும் தவிரலர் – நற் 115/9,10 அன்புடையவர், வாழ்க தோழியே! பெரிய புகழைக் குறைவின்றிப் பெற்றாலும் நம்மை விலக்கமாட்டார்; இவன் இவள் ஐம்பால் பற்றவும் இவள் இவன் புன் தலை ஓரி வாங்குநள் பரியவும் காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது – குறு 229/1-3 இவன் இவளின் பின்னிய கூந்தலைப் பற்றி இழுக்கவும், இவள் இவனது சீவப்படாத தலையின் மயிரைப் பற்றி வளைத்துவிட்டு ஓடவும், அன்புமிக்க செவிலித்தாயர் விலக்கிவிடவும் விலகாது கொலை சினம் தவிரா மதன் உடை முன்பின் – அகம் 148/2 கொல்லும் சினம் குறையாத செருக்குப் பொருந்திய வலிமையினையும் ஒழிய சூழ்ந்தனை ஆயின் தவிராது செல் இனி சிறக்க நின் உள்ளம் – அகம் 19/7,8 (திரும்பிச்) செல்ல நினைத்தால், தடையின்றிப் போகலாம் இனியே – சிறப்புறட்டும் உன் உள்ளம்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்