சொல் பொருள்
தாடியைத் தடவல் – கவலைப்படல்
சொல் பொருள் விளக்கம்
சில உணர்வுகள் சில செய்கைகளால் வெளிப்படும். அவ்வாறு வெளிப்படுத்துவனவற்றுள் ஒன்று தாடியைத் தடவலாம். தாடி இல்லாதவர் தாடையைத் தடவல் அவ்வகைத்தே. இழப்புக்கு ஆட்பட்டவர் செயலோடாத நிலையில் இருந்து தலையைப் பிடித்தல், நாடியைத் தடவல் ஆகிய செயல்களைச் செய்வர். அதனால் எவரேனும் காலைக்கட்டி உட்கார்ந்தாலும், தாடியைத் தடவினாலும் “என்ன கப்பல் கவிழ்ந்துவிட்டதா?” என்பர். “தாங்காத இழப்புக்கு ஆட்பட்டவர் செயலை ஏன் செய்கிறாய்” என்பது வினவற் பொருளாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்