சொல் பொருள்
தாட்டிகம் – வலிமை, வல்லாண்மை
சொல் பொருள் விளக்கம்
தாள் என்பது முயற்சி, வலிமை ஆகிய பொருள் தரும் சொல். தாட்டிகம் என்பது பிறரை அடக்கி ஆளலும், பிறர்க்கு மேம்பட நிற்றலுமாகிய தன்மை குறித்து வழங்கும் சொல்லாக உள்ளது. “அவன் தாட்டிகமானவன்” என்பதில் வலிமைப் பொருளும், “அந்தத் தாட்டிகன் போய்விட்டான் ஊரே வைத்தவன் வரிசையாகிவிட்டது” என்பதில் வல்லாண்மைப் பொருளும் உண்மை புலப்படும். இவ்வல்லாண்மை வழிப்பட்டதே தாட்டிகம் ஆகும். வன் கொடுமை வழிப்பட்டது அன்று. சிலர் அடாவடித்தனம் செய்வது தாட்டிகம் எனப்படாது என்க.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்