சொல் பொருள்
தான்தோன்றி – சொல்வார் சொற்கேட்டு நடவாதவன்
சொல் பொருள் விளக்கம்
‘தான்தோன்றி’ யப்பர் எனச் சிவபெருமான் பெயர் சில கோயில்களில் உண்டு. இலிங்க உரு எவரும் செய்துவைக்காமல் நிலத்தை அகழுங்கால் வெளிப்பட்டதாகவோ, கல்லின் அமைதியே இலிங்க வடிவு உடையதாகவோ இருந்தால் இப்பெயர் அதற்கு வழங்கப்படும். அது தான்தோன்றி எனப்படுவதுபோலத் தனக்குத் தோன்றியதே சரி; பிறர் சொல்வதைப் பற்றிக் கருதுவது இல்லை என வாழ்பவரும் உளர். அவரைத் தான்தோன்றி என்பது வழக்கு. தனக்குத் தோன்றுவதே தோற்றமாகக் கொண்டவன் தான்தோன்றி. தான்தோன்றித்தனம் என்பது அறிவின்மையைக் குறிக்கும் வசையாகவும் வழங்குகின்றது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்