சொல் பொருள்
(பெ) 1. கழுத்தணி, 2. பூமாலை
சொல் பொருள் விளக்கம்
1. கழுத்தணி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
necklace, wreath, garland
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திருமருத முன்துறை சேர் புனல்-கண் துய்ப்பார் தாமம் தலை புனை பேஎம் நீர் வையை – பரி 7/83,84 திருமருத முன்துறை என்ற பெயர்கொண்ட துறையைச் சேரும் வையை நீரில் குளித்து இன்புறுவாரின் கழுத்தணிகளைத் தன் தலைமேல் சூட்டிக்கொள்ளும் அச்சந்தரும் ஆழமான நீரைக்கொண்ட வையையே! சூடு நறவொடு தாமம் முகிழ் விரிய – பரி 23/55 சூடியுள்ள நறவத்தின் மொட்டுடன் பூமாலையின் மொட்டுக்களும் மலர,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்