Skip to content

தாயமாட்டல்

சொல் பொருள்

தாயமாட்டல் – காலங்கடத்தல்

சொல் பொருள் விளக்கம்

தாயமாவது சூது. அது, இழக்க இழக்க மேலும் ஆர்வத்தை ஊட்டி ஆடவைப்பது. இழந்ததை மீட்டு விடலாம் மீட்டு விடலாம் என்றே மேலும் மேலும் இழக்கச் செய்வது சூதாகலின், அதில் ஈடுபட்டவர் பசியறியார்; தொழிலறியார்; குடும்ப நிலையறியார்; வீட்டில் நோயார் இருப்பினும், இறப்பே நேரினும் எண்ணிப்பாரார்; அத்தகைக் கொடுமை வாய்ந்தது சூது. ஆதலால் குடியைக் கெடுக்கவேண்டுமாயின் தாயம் ஆட வைத்து விட்டால் போதும், தாமே தம் குடியைக் கெடுப்பார். தாயம் ஆடவைத்தல் ‘தாயமாட்டல்’ என்க. ஆடல் வேறு; ஆட்டல் வேறு; அறிக.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *