சொல் பொருள்
தாறு – தாற்று உடையில் கட்டுதல்
மாறு – தாற்று உடையை மாற்றி எடுத்துச் சுற்றிக் கட்டுதல்.
தாறு – தாற்றுக் கோலால் குத்துதல்.
மாறு – முள் மாற்றால் அறைதல்.
சொல் பொருள் விளக்கம்
தட்டுச் சுற்று, வட்டுடை என்பவை மேல் நாள் உடைமுறை. அதன் வழி வந்ததே தாறு கட்டுதல். ‘தாற்றுப் பாய்ச்சுதல்’ என்பதே. சிற்றூர்களில் ‘தாற்பாச்சை’ என இன்றும் வழக்கில் உள்ளது. கீழ்பாச்சி
மேலிருந்து கீழும், கீழிருந்து மேலுமாக மாற்றிக் கட்டுதல் போல் எதிரிடையாகச் செய்வதைத் தாறுமாறு என்பதும் பொருந்துவதாம். ‘ தெய்வம் மடிதற்றுத் தான்முந்துறும்’ என்பதில் தற்றுடை வந்தது அறிக.
‘தாறுமாறாக பேசுதல்; தாறு மாறு செய்தல்’ என்பவை நாட்டு வழக்கில் உள்ளவை. தாறுமாறு செய்வது புண்படுத்துவதாம். தாற்றுக்கோல், இரும்புமுள், கம்பு, சாட்டை இவற்றை ஒருங்கு உடையதாம். அதனால், குத்தியும் அடித்தும் அறைந்தும் மாட்டை ஓட்டுதல் உண்டு. தாற்றுக் கோலை முன்னும் பின்னும் மாற்றிப் பயன்படுத்தலை அறிக. தாறுமாறு அத்தகையதே. மாறு ‘கம்பு, வளார், குச்சி’ எனவும்படும். ‘தாறுகோல்’ எனவும் வழக்கில் உண்டு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்