Skip to content

சொல் பொருள்

(பெ) 1. சிறுவர் கழுத்தில் அணியும் தாயத்து, 2. சோழி

மகளிர் அணியும் தாலி பொதுவழக்குச் சொல்

செம்மறியாட்டின் கழுத்தின் கீழே இரண்டு தசைத் தொங்கல்கள் தொங்குவது உண்டு. அவற்றைத் தாலி என்பது ஆயர்வழக்கு

தாலி என்பது தொங்குவது என்னும் பொருளது

சொல் பொருள் விளக்கம்

மகளிர் அணியும் தாலி பொதுவழக்குச் சொல். செம்மறியாட்டின் கழுத்தின் கீழே இரண்டு தசைத் தொங்கல்கள் தொங்குவது உண்டு. அவற்றைத் தாலி என்பது ஆயர்வழக்கு. தாலி என்பது தொங்குவது என்னும் பொருளது. தால் – நாக்கு. தாலம் = பனை.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Amulet tied on a child’s neck

cowree

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புலி பல் தாலி புதல்வன் புல்லி – குறு 161/3

புலிப்பல் தாலியுடைய மகனைத் தழுவிக்கொண்டு

பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை
வரி வெண் தாலி வலை செத்து வெரூஉம் – ஐங் 166/1,2

பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
வரிகளையுடைய வெண்மையான சோழிகளைக் கண்டு வலையோ என்று எண்ணி வெருளும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *