சொல் பொருள்
தாளம்போடல் – அடித்தல்
சொல் பொருள் விளக்கம்
தாளம், தாள் என்பதில் இருந்து தோன்றினாலும், பின்னர் கால் தாளம், கைத் தாளம் என இரண்டாக விரிந்ததாம். கால் தாளம் உதைத்தலால் உண்டாவது. கைத்தாளம் குட்டுதல், அடித்தல், அறைதல், இழுத்தல் ஆகியவற்றால் உண்டாவது. “ஒழுங்காக இருக்கிறாயா? தாளம் போடவா?” என்றால், அடிக்கவா மிதிக்கவா என்னும் பொருளில் வருவதாம். ‘அத்தாளம்’ என்பது வேறொரு வகையது. அல் – இரவு, தாலம் – சோறு. அற்றாலம், இரவுணவு. ‘தாளம்’ என்பதற்கு அடி என்னும் பொருள் வந்த பின் ‘அத்தாளம்’ எனச் சிதைவடைந்த சொல்லுக்கும் அப்பொருளே வழக்கில் வந்துவிட்டது. அத் தாளம் என்பது அடி.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்