சொல் பொருள்
(பெ) 1. வாய் அகன்ற பெரிய மண் பானை, 2. இறந்தோரை அடக்கஞ்செய்துவைக்கும் பாண்டம்,
சொல் பொருள் விளக்கம்
1. வாய் அகன்ற பெரிய மண் பானை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
burial urn
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கல்சேர்பு இருந்த கதுவாய் குரம்பை தாழி முதல் கலித்த கோழ் இலை பருத்தி – அகம் 129/6,7 பாறையைச் சேர்ந்திருந்த சிதைவுற்ற குடிசையில் தாழியில் தழைத்துவளர்ந்த கொழுவிய இலையையுடைய பருத்திச்செடி வியல் மலர் அகன் பொழில் ஈம தாழி அகலிது ஆக வனைமோ – புறம் 256/5,6 பெரிய பரப்பினையுடைய அகன்ற பூமியிடத்துக் காட்டின்கண் முதுமக்கள் தாழியை அகலம் அதிகமுடையதாகச் செய்வாயாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்