சொல் பொருள்
திக்கு – புரவலர் அல்லது வள்ளன்மையாளர் (திக்குக்கு உதவியாக அமைந்தவர்)
திசை – புரவலர் அல்லது வள்ளன்மையாளர் இருக்கும் திசை.
சொல் பொருள் விளக்கம்
“திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை” என்பது தனிச் சிறப்புடைய பழமொழி. இவண், திக்கு என்பது ஆதரவாளரைக் குறிக்கும். புலவர்களும், கலைஞர்களும், இரவலர்களும் ‘திக்குத் திசை’ தெரியவில்லை என ஏங்கும் நிலை இருப்பதுண்டு. அந்நிலையில் எழுந்த இணைச்சொல் ‘திக்குத்திசை’ தெரியவில்லை என்பதாம். திக்கு என்பதும் திசை என்பதும் ஒரு பொருட் சொல் போல் தோன்றினும் திக்கு என்பதன் பொருள் ஆதரவு என்பதாம். திக்கு வேறில்லை என்பது அருணகிரி அந்தாதி.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்