திண்டு என்பதன் பொருள்தலையணை,திண்ணை,மனத்தில் இரக்கமில்லாததன்மை.
1. சொல் பொருள்
தலையணை – அரைவட்ட வடிவான பஞ்சணை, நீள் உருண்டை வடிவத் தலையணை
திண்ணை –வீட்டு முகப்பில் உள்ள திண்டு, முட்டாகக் கட்டப்படும் சிறு சுவர்
ஓரிடத்தில் உயர்ந்து தோன்றும் கல் அல்லது கற்பாறை
மனத்தில் இரக்கமில்லாத, பாறைக் கல் போன்ற தன்மை
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
Semi-circular cushion/pillow.
Any small construction of brick built as a support
3. சொல் பொருள் விளக்கம்
தலையணை, திண்ணை போன்றதைக் குறிக்கும். ‘திண்டு தலையணை’ என்பதில் திண்டு மெத்தையைக் குறிக்கும். திண்ணையில் சாய்ந்து கொள்வதற்காகத் திண்டு அமைப்பதும் வழக்கு. திண்டுக்கு முண்டு என்பதில் எதிரிடைப் பொருள் தரும்.
ஆனால் இத்திண்டு வேறுபட்டது. “அவன் மனத்தில் ஒரு திண்டு இருக்கிறது. அதனால் கலகலப்பாகப் பேசுகிறானா பாருங்கள்” என்பதில் திண்டு என்பதற்கு வஞ்சம் அல்லது கரவு என்னும் பொருளுண்மை வெளிப்படும்.
4. பயன்பாடு
கீழடியில் ‘குடிநீர் தொட்டி’ போன்ற திண்டு கண்டுபிடிப்பு
திண்டில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம்
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்