சொல் பொருள்
(பெ) தித்தன் என்ற சோழ மன்னனின் மகனான வெளியன்.
சொல் பொருள் விளக்கம்
தித்தன் என்ற சோழ மன்னனின் மகனான வெளியன்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a son of the chozha king thiththan.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சினம் கெழு தானை தித்தன் வெளியன் இரங்கு நீர் பரப்பின் கானல் அம் பெருந்துறை – அகம் 152/5,6 சினம் மிக்க படையினையுடைய தித்தன் வெளியன் என்பானது ஒலிக்கும் நீர்ப்பரப்பினையுடைய கானல் அம் பெருந்துறை என்னும் பட்டினத்தில், என்ற அடிகளிலிருந்து, இவன் தன் தந்தையின் காலத்தில் கானலம் பெருந்துறையில் ஆட்சி செய்தான் என அறியலாம். கானலம் பெருந்துறை என்பது ஒரு கடற்கரைப்பட்டினம். இதனைப் புகார் என்பர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்