சொல் பொருள்
தினவு எடுத்தல் – அடங்காது திரிதல்
சொல் பொருள் விளக்கம்
“தினவெடுத்துத் திரிகிறான்” என்னும் சொல்லின் பொருட்குறிப்பு ஆழமானது. படக்கூடாதது பட்டால் தோலில் தினவு உண்டாகும். இவனோ அத்தினவுக்கு ஆட்படாமல் உடல் தினவுக்கு (காமவெறிக்கு) ஆட்பட்டு அவ்வெறியாலேயே திரிபவன் என்னும் பொருளில் வழங்குவதாம். ‘தினவு’ அரிப்பு எனவும் படும். அரிப்பெடுத்து அலைகிறான் என்பதும் இப்பொருளதே. பொறாமை, பிறர்க்கு உண்டாகும் தீமையால் மகிழ்தல் முதலியவும் இத்தினவு வகைப்பட்டதே. அடங்காத்தனம் சுட்டும் சொல்லாகத் தினவு வழக்கில் உள்ளது. இப்பொழுது எழுதும் சிறுகதை, பேசும் அரசியல் ஆகியவற்றில் தினவும் அரிப்பும் மிக இடம் பெறுகின்றன.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்