சொல் பொருள்
தின்றால் – உண்டு முடித்தால்.
தெறித்தால் – கைகழுவி முடித்தால்.
சொல் பொருள் விளக்கம்
“தின்றால் தெறித்தால் வீதிக்குப் போக வேண்டியது தானே! வீட்டுக்குள் ஏன் அடைந்து கும்மாளம் போடுகிறீர்கள்” என்பது குழந்தைகளைப் பார்த்துப் பெரியவர்கள் வெருட்டுதல் உண்டு. கை கழுவி முடித்தால் வெளியே போய், அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கவேண்டும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பாம். தின்றல் என்பது வெளிப்படை. தெறித்தல் என்பது நீர் தெறித்தல் என்பதாம். தண்ணீர் தெறிக்கும் ஒதுங்கி நில்லுங்கள் என்பது வழக்கு. தெறித்தல் என்பது கையலம்புதலைக் குறித்ததாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்