சொல் பொருள்
(வி) 1. முறுகு, 2. பின்னிப்பிணை, 3. இறுக்கக் கடி
சொல் பொருள் விளக்கம்
1. முறுகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be intense, severe, be close together, interwine, bite hard
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காய் சினம் திருகிய கடும் திறல் வேனில் – பெரும் 3 சுடுகின்ற தீ(யின் வெப்பம்) தீவிரமாகிய கடுமையான வீரியமுடைய (முது)வேனில் காலத்தில், பருகு அன்ன காதலொடு திருகி மெய் புகு அன்ன கை கவர் முயக்கத்து – அகம் 305/6,7 ஒருவரையொருவர் பருகுவது போன்ற காதலுடன் பின்னிப்பிணைந்து ஒருவர் மெய்க்குள் ஒருவர் புகுந்துவிடுவதைப் போன்ற கைகளினால் அணைத்துக்கொள்ளும் தழுவலில் பல் ஊழ் நொடித்து என சிவந்த மெல் விரல் திருகுபு கூர் நுனை மழுகிய எயிற்றள் – அகம் 176/23-25 பல முறை முறித்துக்கொள்வதால் சிவந்த மெல்லிய விரலினையும், திருகிக் கடித்தலால் கூரிய முனை மழுங்கிய பற்களையும் உடையளாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்