சொல் பொருள்
திருநீறு பூசுதல் – உணவு முடித்தல்
சொல் பொருள் விளக்கம்
சிவநெறியர், உணவு கொள்ளுமுன் திருநீறுபூசுதல் வழக்கம். அதனால் ஒருவர் திருநீறு பூசியிருந்தால் உணவை முடித்துவிட்டார் எனப் பொருள் செய்வது வழக்கம். இதனால் வாயாலேயே விருந்து செய்துவிடும் தேர்ச்சியுடையவர்கள். “திருநீறு பூசியிருக்கிறீர்கள். சாப்பாடு முடிந்துவிட்டது போலும்” என்று பேச்சை முடித்துக் கொள்வர். “இல்லை இல்லை நீறில்லா நெற்றிபாழென்பதறிந்து பூசினேன்; உண்டேனில்லை; உணவு வேண்டும்” என்பாரா அப்படி வேண்டுமென்றாலும் வாய் விருந்தர்க்கு வேறு வழியில்லாமல் போய்விடுமா?
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்