சொல் பொருள்
(வி) 1. அழகுபெறு, 2. சிறப்படை, செம்மையாகு, 3. நன்றாக அமை, 4. நன்கு செய்யப்படு, 5. மேன்மையடை,
சொல் பொருள் விளக்கம்
1. அழகுபெறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be beautiful, lovely, become perfect, be well completed, be finished artistically, be worthy, honourable
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ – திரு 203,204 சுரும்பு (தேன்)உண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்ந்த அழகினையுடைய தழையை அழகுபெற்ற வடங்களையுடைய அல்குலிடத்தே அசையும்படி உடுத்தி, பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி – பொரு 41,42 பொருந்தின மயிர் ஒழுங்குபட்ட செம்மையான கணைக்காலுக்குப் பொருந்த அமைந்த ஓடியிளைத்த நாயின் நாவைப்போன்ற பெருமை தக்கிருக்கும் சிறிய பாதங்களை கோதையின் பொலிந்த சேக்கை துஞ்சி திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து – மது 713,714 தூக்கு மாலைகளால் பொலிவுபெற்ற படுக்கையில் துயில் கொண்டு – நன்றாக அமைந்த உறக்கத்தை (சூதர் இசை பாடி)த் துயிலுணர்த்த, இனிதாக எழுந்து, திருந்து இழை மகளிர் விரிச்சி நிற்ப – நற் 40/4 நன்குசெய்யப்பட்ட இழை அணிந்த மகளிர் நற்சொல் கேட்டு நிற்க திறன் மாண்டு திருந்துக மாதோ நும் செலவு என வெய்து_உயிரா – அகம் 299/18,19 செய்திறத்தில் மாட்சியுற்று மேன்மையுறுக உமது பயணம் என்று கூறி, வெப்பமாகப் பெருமூச்சுவிட்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்