திருவலகு என்பதன் பொருள் கோயில்துடைப்பம்.
1. சொல் பொருள்
அலகிடுதல் = பெருக்குதல்.
அலகு = பெருக்குமாறு, துடைப்பம்.
திருவலகு இட்டான் என்பது இறையனார் களவியல் உரை
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
Broom used in temples
3. சொல் பொருள் விளக்கம்
திருவலகு இட்டான் என்பது இறையனார் களவியல் உரை. அலகிடுதல் = பெருக்குதல். அலகு = பெருக்குமாறு. திருக்கோயில் வழக்கில் இருந்த இது பார்ப்பனருள் மாலிய வழிபாட்டார் (ஐயங்கார்) வீட்டு வழக்காகக் கொண்டுள்ளனர்.
4. பயன்பாடு
ஓட்டுனர், திருவலகு பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்